Pages

Wednesday, February 10, 2010

அடலேறு அனுபவம் 3

தொலைபேசி உரையாடல்-3

நான்: ஹலோ, டிராவல்ஸ் ஆபீஸா?

எ.மு: ஆமா சார் சொல்லுங்க..

நான்:சார் வெள்ளிக்கிழமை பொள்ளாச்சிக்கு ஒரு டிக்கெட் வேணும்

எ.மு:இருங்க பாத்து சொல்ற… ஒரே சீட் தா இருக்கு சார்

நான்:நானும் ஒருத்தன் தான் சார் இருக்க

எ.மு:சரி சார் , உங்க பேரு , போன் நம்பர் சொல்லுங்க.

நான்:(சனி இன்னைக்கு பொட்டு வெச்சு , பூவும் வெச்சு விளையாடாம போகாதே என நினைத்தவாரே)

பேரு அடலேறு, அலைபேசி எண்.^&*^(*&^*(

எ.மு:சரி சார் , புக் பண்ணிட்ட 7 மணிக்குள்ள வநது டிக்கெட் வாங்கிகோங்க..
(ஆச்சர்யம் கொண்டவனாய் முதல் முறையே நம்ம பெயர சரியா எழுதீட்டாரே ! இவன் ஒரு மிக பெரிய அறிவாளி என எண்ணியபடியே)

சார் பேர சரியா எழுத்தீட்டீங்களா?

சரியா எழுதீட்ட சார், தினமும் எவ்வளோ பேரு போன் பண்றாங்க, அதெல்லாம் கரெக்டா எழுதீட்ட ”கடலாறு தான சொன்னீங்க”னு

சொன்னானே பாக்கனும்…, இடியே என் தலை மீது விழுந்தது

No comments:

Post a Comment