Pages

Thursday, August 5, 2010

> Who am I? >

Who am i?

May be am the one who have touched ur heart very closely and or may be am the one hu have strucked ur mind severely.

I never disclosed my myself, bcoz
Never explain yourself. Your friends don't need it and your enemies won't believe it


Have u ever seen a kid's ecstasy after getting the chocos from its long cry?

Have u ever smelt the smell of ground before rain?

Have u ever cried in the lonely nights?

Have u ever spent ur whole busy day with ur close ones?

Have u ever ditched by some close ones?

Have u ever conversed with twinkling stars in the terrace?

Have u ever worried for someones pain?

Have u ever noticed some one striving for food? Have u ever helped them?

Have u ever enjoyed ur silence?

Have u ever smiled to some anonymous?

Have u ever regret for hurting ur someone?

Have u ever annoyed urself?

Sometyms i have look funny, sometyms i may seems to be very crazy! I kno wat am, I kno whr am. Am here to live my OWN LYF, not others! so plz............. !! I have some own identity ! I dnt want to lose that unless until it hurtz some REAL ONES !!Am going in my way!Alone, alone, alone all the way !



I have no fear of being alone/ walking alone! But still my fear is r u peepz r safe?
I neva worried for this lonely lyf! But my concern is will it be safe widout me!

Seriously Nobdy knows wat am thinking, wat am telling! Most of the peeps know ma smiling face only ! Most of the peeps kno ma violent action only ! lol ! But seriously this is not real at all the tyms!

Life moulded me ! These changes are irrespective of ma woe! Juz i have adapted, coz i was forced to do so! I have hurted so may in my past lyf !I have made them cry !
I dunno how am going to compensate those immatured things! Seriously I have no ego to ask them sorry for what i have done! But those things wnt vanish coz of my sorry!

I have backstabbed by soneones. I have ditched by fewone!

When i start to rationalise/realize abt life, the first thing comes in my mind is " God Shld be crazy" . Am either atheist, nor a theist ! I was a theist in my past life ! Now am a least bothered wheather he is existing or non existing!

I have one kosteen! Acc to newtons third law "Every axn has an equal and opp reacn" God is existing coz of devils or devils are existing bcoz of god?
lol! nothing offense i meant! some cranky thinkings ;)

I have some ambitions or goals! I will alive/boast here until achieve that!

Life is teaching me the lesson! am also learning day by day! I dunno how its gng to treat me! Anyhw some of ma char i wnt change ! My one and only wish is i have to accomlish wat am dreaming for so long years :)

If u e theist do prya for me, if u r an atheist do wish me :).

Wednesday, March 31, 2010

முட்டாள்கள் தினம்


"The first of April is the day we remember what we are the other 364 days of the year. " - Mark Twain.

-என்று நம்மைப்பற்றி முன்பே உரத்துச் சொல்லிவிட்டார்.

"முட்டாள்கள் தினம்" ஏப்ரல் 1ம் தேதி உலகமெல்லாம் முட்டாள்களாக்கும் முயற்சி நடைபெறுகிற ஒரு முட்டாள் நாள் என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம்தான். இதை யார் துவக்கி வைத்தது? இதற்கு ஒரு ஆரம்பம் இருந்தாக வேண்டுமே. இருந்தது உண்மைதான்!

முட்டாள்கள் தோன்றிய வரிசை என்று பார்த்தால், பிரான்சு முதலாவதாக , இரண்டாவதாக இங்கிலாந்து, மூன்றாவது மெக்ஸிக்கோ அடுத்து சுவீடன், இந்தியா என்று பட்டியல் ஒரு ரவுண்ட் உலகம் சுற்றி வரும். காலம் தன் தேய்பிறை நாட்களில் உண்மையை முழுவதுமாக மறைத்து விடவில்லை.

அன்றைய ரோமானிய நாட்காட்டியின்படி ஏப்ரல் 1ம்தேதி பொழுது புலர்ந்து பூபாளம் பாடுகிற வேளை தான் வசந்தம் துவங்குகிற பொன்னாள்.இது கி.பி.154க்கு முன்பிருந்து பொதுமக்களால் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை.

புத்தாண்டுக் கொண்டாட்டங்களை மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன.

இந் நாளில் கடவுளுக்கு பலி செலுத்தும் பழக்கமும் காணிக்கைகளைச் செலுத்தும் வழக்கத்தையும் கொண்டிருந்தனர். ஆடல், பாடல், நடனம் என்று கலை நிகழ்ச்சிகளில் மூழ்கி தங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திக் கொண்டனர். இது எதிர் வரும் புத்தாண்டைச் சிறப்பாக வரவேற்கும் வகையான நிகழ்வின் வெளிப்பாடாகக் கருதப்பட்டது. மகிழ்ச்சி பொங்கும் வாழ்க்கை நிலவிட வழிபாடுகளை மேற்கொண்டனர்.

ஹார்வி என்னும் வரலாற்றாய்வாளர் தனது குறிப்பில், "பிரான்சு தேசத்தின் அரசன் ஒன்பதாம் சார்லஸ் காலத்தில் மார்ச் மாதம் 25ம்தேதியிலிருந்து ஒருவார கால புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக குறிப்பிடுகிறார்.

திருவிழாவைப்போல் நடைபெறும் இந்தக் கொண்டாட்டங்களின் போது ஒருவருக்கொருவர் பரிசுப் பொருள்களையும், அன்பளிப்புகளையும் வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டதாக குறிப்பிடுகிறார். இந்த ஒரு வாரக் கொண்டாட்டத்தின் இறுதி நாளான ஏப்ரல் ஒன்றாம் தேதி பெரு விருந்துடன் புத்தாண்டு விழா நிறைவெய்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

16ம் நூற்றாண்டில் பிரான்சு தேசத்தில் துவங்கியது இந்தப் பழக்கம். 1500களில் ஆண்டுத் துவக்க நாளாக ஏப்ரல் 1ம் தேதியையே கொண்டிருந்தனர். 1562ம் ஆண்டில் போப் கிரகோரி புதிய ஆண்டுத் துவக்கத்தை நடைமுறைப் படுத்தும்படி அறிவித்தார்.

ஆண்டுத் துவக்க நாளாக சனவரி 1ம்தேதியை அறிமுகம் செய்து வைத்தார். இனி மேல் பிரான்சு தேசம் முழுமையும் இந்த நாட்காட்டிதான் என்று ஊர்தோறும் அறிவிக்கப்படது. இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அல்லது போப்பின் அறிவிப்பை நம்பாதவர்கள் ஏப்ரல் 1ம்தேதியையே புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடினர்.

ஏப்ரல் 1ம்தேதியைக் கொண்டாடியவர்களை கேலியும் கிண்டலும் செய்ததோடு அவர்களை நூதனமாக ஏமாற்றி "ஏப்ரல் முட்டாள்கள்" (April Fool) என்றழைக்கவும் செய்தனர். நள்ளிரவு தாண்டியும் நாட்டிய நடனங்களில் ஈடுபட்டு மிகுந்த மகிழ்ச்சிகரமாக இருந்திருக்கின்றனர்.

ரோமாபுரி... ரோமாபுரியில் கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வந்தபோது, நடைமுறைகளை மாற்றினார்கள். தற்போதுள்ள ஈஸ்ட்டர் பண்டிகையினையும் மாற்றி அறிவித்தார்கள். பழமையான கொண்டாட்டங்களை மாற்றியதோடு அவற்றில் ஒரு சிலவற்றை வேடிக்கை வினோத கொண்டாட்டங்களுக்குரிய நாளாக மாற்றினர். இந்த மாற்றங்களில் நம்பிக்கை இல்லாமலிருந்த இவர்களை கேலியும் கிண்டலும் செய்து விளையாட்டாக முட்டாளாக்கி ஏமாற்றும் போக்கில் ஈடுபட்டனர். இதுவே நாம் இன்றைக்கு வேடிக்கையாய் முட்டாள்களாக்கி மகிழ்கிற நாளாக தொடர்ந்திடுகிறது எனலாம்.

சனவரி மாதம் 1ம் தேதியை புத்தாண்டாக ஏற்றுக் கொள்ள மறுத்தவர்கள் அல்லது மறந்தவர்களுக்கு முட்டாள்தனமான பரிசுகளை அனுப்பினர். பெரிய பரிசுக் கூடைகள் போன்று வடிவமைத்து உள்ளே குதிரை முடி, பழைய குப்பை என்று நிரப்பிக் கொடுத்து ஏமாற்றுதல் போன்ற ஏமாற்று வேலைகளைச் செய்து ஏமாற வைத்தனர். இதை நம்பும்படியான ஆனால் நகைக்கும்படியான செயலாக செய்து மகிழ்ந்தனர்.

ஏப்ரல் முதல் நாளை, "Poission d'avril " என்று அழைத்துள்ளனர். இத்தகைய கேலிக் கூத்துக்கள் சுற்றிச் சுழன்று பிரான்சிலிருந்து இங்கிலாந்துக்கும் அங்கிருந்து அமெரிக்காவுக்கும் ஏப்ரல் ·பூல் விரிந்து பரவி இருக்கிறது. இது குறித்து சிகாகோவில் உள்ள இல்லிநாய்ஸ் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் ஸ்டீவன் ·பேன்னிங் ஐரோப்பாவில் எப்படி எல்லாம் நடந்தது என்று விலாவாரியாகக் குறிப்பிட்டுள்ளார். கிரகோரியன் காலண்டரை ஏற்றுக் கொண்ட முதல் நாடாக பிரான்சு இருந்தாலும் இத்தகைய கேளிக்கைகளின் ஆணிவேரைக் கண்டுபிடிக்கப் போதுமான ஆதாரக் குறிப்புகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்."

நெப்போலியன் I , ஆஸ்திரியாவைச் சேர்ந்த மேரி லூயிஸை 1810-ல் திருமணம் செய்துகொண்டார். அந்த மாதம், நாள் ஏப்ரல் 1 என்பதால் மணமகளை கேலி செய்து இருக்கின்றனர். நெப்போலியன் உண்மையாகத் திருமணம் செய்யவில்லை. உன்னை முட்டாளாக்கவே திருமணம் செய்திருக்கிறார் என்று எள்ளி நகையாடியதாகக் கூறப்படுகிறது.

ஸ்காட்லாந்தில்

"April Fool's Day"யை, "April Gawk" என்று கடைப்பிடித்ததாக பேராசிரியர் ஸ்டீவன் தெரிவித்துள்ளார்.

அதாவது ஏப்ரல் 1ம் தேதி வினோதமாக உடையுடுத்தி ரெண்டுங்கெட்டானாக நடந்து கொண்டு ஸ்காட்டிஷ் மக்கள் அந்த நாளை நகர்த்தியதாக மேலும் தெரிவிக்கிறார். ஒரு பொய்யை உண்மை என்று நம்ப வைப்பது, ஒரு கடிதத்தில் அவசரம் என்று மேலே எழுதி உள்ளே முட்டாள், "இன்று ஏப்ரல் ·பூல் தினம் தெரியுமா? அது வேறு யாருமில்லை நீதான்," இப்படி எழுதி அனுப்புவதை வழக்கமாகச் செய்திருக்கின்றனர்.

"ஏப்ரல் மீன்" பிரெஞ்சுக் குழந்தைகள் கூட காகிதத்தில் மீன் போன்று செய்து தனது சினேகிதர்களின் முதுகில் ஒட்டி அனுப்பிக் கேலி செய்திருக்கின்றனர். இப்படி முதுகில் மீனோடு திரிகிற குழந்தைகளைப் பார்க்கும் குழந்தைகள் "ஏப்ரல் மீன்" என்று அழைத்துக் கேலி செய்திருந்திருக்கின்றனர்.

அமெரிக்காவில்...

அமெரிக்காவில் "April Fool's Day" அல்லது "All Fool's Day" என்று அழைக்கிறார்கள். சாதாரணமாக ஒரு நண்பர் இன்னொரு நண்பரை திடீர் என்று, "ஒன்னோட ஷ்லேஸ் அவிழ்ந்து தொங்குது பார்" என்றோ முதுகுப் பக்கம் கோட்டுல ஏதோ ஒரு கறை அசிங்கமா இருக்கு, மொதல்ல அதைக் கழட்டு என்று சொல்லி ஏமாற்றுவார்கள். 19ம் நூற்றாண்டில் ஆசிரியர்களே மாணவர்களிடம் அங்க மேல பாருங்க பொம்மை கூஸ் பறக்குதுன்னு சொல்வாங்களாம். (நம்ம ஊர்ல வெள்ளைக் காக்கா பறக்குதுன்னு சொல்வோமே..!) மாணவர்கள் சக மாணவர்களைப் பார்த்து இன்னைக்கு ஸ்கூல் லீவு தெரியுமா? அப்படின்னு சொல்லுவார்கள். எது எப்படியோ அவர்கள் ஏமாந்தவுடன் ஹை..... எப்ரல் ·பூல் என்று சொல்லி குதூகலித்துக் கொள்வது என்ற அளவில் தான்.

ஏமாற்றலுக்கு ஏமாற்றல் என்றும் நடப்பதுண்டு. சர்க்கரைச்(சீனி) சாடியில் உப்பைப் போட்டு ஏமாற்றுதல், மணிப் பர்ஸில் ஒரே ஒரு பென்னியை வைத்து ஏமாந்தாயா முட்டாள் என்று எழுதி நண்பர்களை ஏமாற்றுதல் சகஜமான ஒன்று. கல்லூரி மாணவர்கள் தங்கள் விடுதிகளில் ஒரு மணி நேரத்தை பின்னோக்கி வைத்து குறிப்பிட்ட வகுப்புகளுக்குப் போக விடாமல் செய்வது; அல்லது வரலாறுக்குப் பதிலாக உயிரியல் வகுப்புக்குச் செல்ல வைப்பது; ஆனால் யாருக்கும் தீங்கிழைப்பது இல்லை; ஏமாற்றலுக்குப் பழி வாங்குதல் என்று இன்று வரை நடந்தது கிடையாது என்றே சொல்ல வேண்டும். ஆங்காங்கே முட்டாள்தனமான ஜோக்குகளைச் சொல்லி விலா எலும்பு நோகச் சிரிக்க வைத்தல் போன்றெல்லாம் நடக்கும்."

மெக்சிக்கோ...

மெக்சிக்கோவில் பாரம்பரியமான முட்டாள்கள் தினத்தைக் கொண்டாடினாலும் இங்கு அது வேறு நாளில் வேறு காரணங்களுக்காகக் கொண்டாடப்படுகிறது. "El Dia los Inocents " என்று டிசம்பர் 28ம் தேதி பச்சிளம் பாலகர்களுக்காகக் கொண்டாடப்படுகிறது. அதிர்ஷ்டமற்ற நாட்கள் என்று முட்டாள்களாக்கப் பட்டவர்கள் கருதுகிற சூழலை பத்திரிக்கைகள், வானொலி, தொலைக் காட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு செய்திகளை வழங்குகிறது.

திரைப்படம்...

1986-ல் ·ப்ரெட் வால்டன் இயக்கிய, "ஏப்ரல் பூல்ஸ் டே" திரைப்படம் மிகப் பிரபல்யம் ஆனது. டெபோரா ·போர்மேன், ஜேய் பேக்கர், டெபோரா குட்ரிச் நடித்திருந்தனர். பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தார் பிரம்மாண்டமாக தயாரித்திருந்த இப்படம் ஒளி நாடாக்களிலும் வீர நடை போட்டு வந்ததை குறிப்பாகச் சொல்லலாம்.

Thursday, March 25, 2010

ஜொள்ளு பார்டிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி?

நம்ம தோழி ஒருத்தரு புதுசா வேலைக்கு சேர்ந்துருக்கேன் வாசு என்று நமக்கு சந்தோசமா மெயில் தட்டி உட்டுருந்தாரு. அதுக்கு பாராட்டலாமேன்னு நானும் ஒரு phone ஐபோட்டு ‘என்னாமா கண்ணு எப்படி இருக்கு புது வேலை எல்லாம்?’ ன்னு கேட்டதுதான் போதும் அவ்ளோதான் ‘வாசு வேலை எல்லாம் ஜுஜுபிதான் !
(அவுக நம்மளை மாதிரி இல்லைங்கோ! நெசமாவே கொஞ்சம் மூளைக்காரவுகதான்!) ஆனா இந்த சீனியருக தொல்லை தான் தாங்கமுடியலை! அப்பபோ அதைய சொல்லுறேன் இதையக் கேக்குறேன்னு வந்து வழியறதைத்தான் எப்படி சமாளிக்கறதுன்னு தெரியலைன்னு !” பூத்து பூத்துன்னு ஒரே அழுவாச்சி ! நமக்குத்தான் ரொம்ப இளகின மனசாச்சே !! அதுவும் இப்படி தாய்குலங்கள் கண்ணீரும் கம்பலையுமா இருக்குறதைப்பார்த்தா மனசு தாங்குமா சொல்லுங்க? அப்படியேக்கா மனசுலே ஒரு ரெண்டு ‘டன்’ பாரம் ‘லோட்’ ஆயிடுச்சு !!

அட இது நம்ம தோழிக்குக்கு மட்டுமா பிரச்சனை ? வெளியே வேலைக்குப்போற நம்ம எல்லா தாய்க்குலங்களுக்குமே உள்ள பிரச்சனை தானே ! எப்படி இந்த மெகா ஜொள்ளு பார்ட்டிகளை சமாளிக்கறதுன்னு ஏதோ நம்மாளான ஐடியாக்களை அள்ளித்தெளிச்சா என்னான்னு தோணுச்சு. இதோ களத்திலே குதிச்சிட்டான் இந்த
வாசு!! நம்ம அம்மணிக எல்லாருக்கும் கோடுபோட்டா போதுமே! தானாவே ரோடு போட்டுருவாங்க. ஓகே அம்மணீஸ்? ஜொள்ளர்களை பல பிரிவா பிரிச்சு மேய்ஞ்சு மகளிர்க்காக ஜடியாக்களை சுடச்சுட அள்ளித் தருவது உங்கள் Vasu !!

ஒட்டக ஜொள்ளுப்பார்ட்டி:

இந்த மாதிரி ஆளுக எல்லாம் பார்தீங்கன்னா தானாவே வலிய வந்து உங்களுக்கு உதவி செய்யற மாதிரிதான் ஆரம்பிப்பாங்க. ‘அட இப்படி ஒரு ‘லாஜிக் லபக்குதாசா?!’ இருக்கானே! கேக்காததுக்கு மின்னாடியே நமக்கு உதவி செய்யுறானே ! இவன் ரொம்ம நல்லவனா இருப்பான் போல இருக்கேன்னு ‘நம்பி’ ஒரு ரெண்டே ரெண்டு மில்லிமீட்டர் அளவுக்கு உங்க ‘பல்லை’ காட்டினா போதும் அவ்வளவுதான் ‘ எக்ஸ்கூஸ் மீ மே ஐ கம் இன் !’ அப்படீன்னு உங்க பக்கத்திலேயே வந்து பகிரங்கமா ‘டென்டை’ போட்டுருவாய்ங்க! அப்படியேக்கா ஒரு ரெண்டே நாள்ல உங்ககிட்டே ‘ கொஞ்சம் தள்ளி உக்கார முடியுமா ? இடம் பத்தலை?! ‘ அப்படீன்னு கேப்பாய்ங்க. நீங்களும் ‘பேத்தனமா’ உங்க ‘சேர்’ ரை நகர்த்தி போட்டு உக்கார்தா உடனே ‘ அட என்னங்க நீங்க? உங்களைத்தானே நாகர்ந்து உக்கார சொன்னேன் chair ஐ இல்லையேன்னு ! “ அப்படியேக்கா லேசா உங்க முகத்தை படிச்சு பதமா ‘பல்ஸ்’ பார்ப்பாய்ங்க. அப்போ மட்டும் நீங்க ‘கெக்கே பிக்கே’ ன்னு பெரிய ‘ஜோக்’ கை கேட்ட மாதிரி இளிச்சுட்டீங்கன்னு வைங்க! அவ்ளோதான் நீங்க காலி !! வாரண்ட் இல்லாமலேயே உங்க மடியிலேயே வந்து பூனை மாதிரி பதுங்கீடுவாய்ங்க ஜாக்கிறதை !


வாத்தியார் ஜொள்ளுபார்ட்டி :

இந்த மாதிரி ஆளுக எல்லாம் பார்த்தீங்கன்னா கொஞ்சம் ‘கெத்’ து மெயின்டெய்ன்’ பண்ணிகிட்டு இருப்பாய்ங்க. ஆரம்பதுலே அப்படியே கஞ்சி போட்டு அயர்ன் பண்ணுன கதர்சட்டை மாதிரி சும்மா வெரப்பா ( ரொம்ப ஸ்ரிட்டாம்! ) சுத்திகிட்டு இருப்பாய்ங்க. உங்களை அப்படியேகா லேசா ஓரக்கண்ணுலே ‘மானிட்டர்’ பண்ணிகிட்டே இருப்பாய்ங்க. நீங்க எப்பவாசும் ஏதாசும் ‘சந்தேகம்’ இல்லை ‘வெளக்கம் ‘ அப்படீன்னு கேப்பீகளான்னு காத்துகிட்டு இருப்பாய்ங்க. ஆனா வெளிய காட்டிக மாட்டாய்ங்க! நீங்களும் அட நம்ம அப்பாவாட்டம் இருகாரேன்னு நம்பி நம்பிக்கையோட போய் பேசுவீங்க. இந்த மாதிரி பார்ட்டிக எல்லாம் ‘ என்னமா கொழந்தே ! ‘ அப்படின்னுதான் மங்களகரமா ஆரம்பிச்சு ‘ அட இந்த தோடு நல்லா இருக்கேன்னு! ‘ ரொம்ப உரிமையோட உங்க காதை தடவுவானுங்க! இப்போ நீங்க உஷாரில்லாம கேனை மாதிரி ‘ சார் நல்லா இருக்கா ! ‘ஜில்மில்’ ல வாங்கினேன்னு இன்னோரு காதையும் காட்டிகிட்டு நின்னீங்கனா போதும் பார்ட்டி அப்படியே வேறெங்கேயெல்லாம் தடவுலாம்னு மனசுகுள்ளே புதுசா ரெண்டு ‘ப்ராஜெக்ட்’ போட ஆரம்பிச்சுடுவாய்ங்க ஜாக்கிரதை!!


திருவோடு ஜொள்ளுப்பார்ட்டி :

இந்த ‘கேட்டகரி’ ஆளுக பார்த்தீங்கனா பிச்சக்காரன் சுடசுட பிரியாணியை பார்த்த மாதிரி உங்களை அப்படி ஒரு பார்வை பார்ப்பானுங்க. அடிக்கடி பக்கத்துல வந்து உங்களைக் கண்ணாலயே தின்னுட்டு பக்கத்து ‘சீட்’ ஆளுகிட்டே அல்பத்தனமா ‘ஜோக்’ அடிச்சுகிட்டு உங்க வாயும் ‘இளிச்ச’ வாயா ஆகுமான்னு நோட்டம் விட்டுகிட்டே இருப்பாய்ங்க! கவலையே படாம நீங்க கதறக் கதற ஜொள்ளுவிடுறது இவனுங்க ஸ்பெஷாலிட்டி. இந்த பிரிவு ஜொள்ளு பார்ட்டிக தான் உங்க பொருமையோட எல்லைய ‘டச்’ பண்ணுறதே ஒரு பெருமையா நெனச்சுகிட்டு கபடி ஆடுவானுங்க. கூடிய மட்டும் இந்த ஆளுகள பார்க்குறப்பொ எல்லாம் பொணம் கணக்கா எந்த ஒரு ‘ரியாச்சன்’ னுமே காட்டாம தேவாங்கை பார்க்குற மாதிரி ஒரு ‘டெட் லுக்’ வுட்டு இருந்தீங்கன்னாதான் பொளச்சுக்குவீங்க. இல்லாட்டி அவ்ளோதான் சும்மா சுனாமி கணக்கா ஜொள்ளை கண்ணாபினான்னு வாரி இரைச்சு உங்களை நாறடிச்சுடுவானுங்க ஜாக்கிறதை !!


அப்பாவி ஜொள்ளுபார்ட்டி :

இந்த மாதிரி ஆளுக எல்லாம் பார்த்திங்கண்ண இந்த ‘காதல் கொண்டேன்’ தனுஷ் மாதிரி பரிதாபமா கையைக் கட்டிகிட்டு குனிஞ்ச தலை நிமிராம உங்க முன்னாடி ‘மார்ச் பாஸ்ட்’ போவாய்ங்க ! அட என்னடா இது இவ்ளோ கூச்ச சுபாவமா இவனுக்கு?! குனிஞ்ச தலைய நிமிரவே மாடேங்கறானே !! இவ்ளோ அப்பாவியா இருகானே! ன்னு நம்பி ஏதோ ரெண்டு வார்தை நீங்களா பேசுனீங்கன்னு வைங்க உடனே ‘ உங்களை நிமிர்ந்து பார்த்து ரேசன் மாதிரி எண்ணி எண்ணி நீங்க கேட்ட கேள்விக்குமட்டும் ரெண்டு வார்த்தையிலே பதில் செல்லிட்டு போவாய்ங்க. அட ரொம்ப ‘கட் அண்ட் ரைட்’ டான ஆளா இருப்பான் போல இருக்கேன்னு நீங்களும் நம்பி நம்பிக்கையோட இருந்தீங்கன்னா அவ்ளோதான். நீங்க போறப்போ வர்றப்போ எல்லாம் லேசா நிமிர்ந்து பாக்குறது ‘சைடு’ல பார்க்குறதுன்னு லேசா நம்மாளுக்குள்ள காதல் உடுக்கை தரிகெட்டு அடிக்க நீங்க காரணமா இருப்பீங்க. இந்த கேட்டகரி ஜொள்ளு எல்லாம் பாவங்க. நீங்களா போய் சும்மா இருக்குறவங்க நெஞ்சுல காதலை பெட்ரோல் ஊத்தி பத்தவசுடாதீங்க !!

Thursday, March 18, 2010

போராளி

பார்த்துவிட்ட கண்கள்
மறக்க துடிக்கும் இமைகள்
தினம் தினம் போராட்டம்
நானும் ஓர் போராளி தான்

எச்சரிக்கை

எச்சரிக்கை என்று எழுதவும்
உன் கண்களுக்கு நடுவில்
இதயங்கள் மோதிக்கொள்ளும்
விபத்து பகுதி அது

எந்தை

கருவறையில் ஒளிந்த எனை
வீட்டின் முகப்பறைக்கு கொண்டு வந்தாய்

பொய்கள் பல சொல்லினும்
புன்னகை மாறா உந்தன் முகம்

லெனினும் கம்யுனிசம் விளக்கிய நீ
திரும்வெம்பாவை சொல்லியது என்னுள் ஆச்சர்யமே

துயரங்கள் நான் தந்தபோதும்
தோழமையாய் உந்தன் கரம்

தோல்விகள் நான் கண்டபோது
தோழானாய் நீ நின்றாய்

என் கைக்குட்டைகள் அறியா கண்ணீர்கள்
உன் மடி நனைத்தது நிஜம்

செயற்கரிய செய்துவிட்டு
சிந்தனையுடன் நீ நிற்பாய்

உன்னை நான் பார்த்த நாட்களை விட
அதிசயித்து பார்த்த நாட்களே அதிகம்

உன் பிம்பமாய் நான் நின்றபோது
எனக்கே என்னுள் பெருமிதம்

என் துயரங்கள் சோகங்கள் தாங்க
தோழானாய் தோள் கொடுக்க
ஈரேழு ஜென்மம் எடுத்தாலும்
எந்தையாய் வந்துவிடு

Tuesday, March 16, 2010

தொட்டுவிடுவேன் என்றா
தூரம் போய்விட்டாய்
எட்டி விடும் தூரத்தில்
தான் உன் நிழல்
நிழலோ நிஜமோ
ஒரு முறை காட்டிவிடு
உன் முகத்தை
என் கண்கள் மறந்துவிடும்
இரவு தூக்கத்தை

Thursday, March 11, 2010

இரக்கம் இல்லாத இரவுகளுகாக:

இரக்கம் இல்லாத இரவுகளுகாக:

இரவுகளே போய்விடுங்கள்
அந்தி சூரியனை அணைத்து
விட்ட இறுமாப்பு வேண்டாம்
என்னவள் முகம் காணா கதிரவனும்
கரைந்து விட்டான் என்னை போல்

காதலின் துயரமறியா இரவுகளே
பூக்களை பார்த்தவுடன் உன் புன்னகை
என்னவள் எதிர் பட்டால்
என்ன ஆகும் உன்நிலை?

சரசங்கள் வேண்டாம் சல்லாபங்கள் வேண்டாம்
என் உச்சரிப்பும் எச்சரிப்பும் உனக்கு தான்
உன் சிரிப்பும் புன்னகையும்
இன்னும் எவ்வளவு நேரம்
வைகறை வரும் வரை தான்

உன் கேலி பேச்சு என்னிடம் வேண்டாம்
வருத்தத்தில் வாடி விட்டேன்
விநாடிகளை எண்ணி கொண்டு இருக்கிறேன்
விடிந்ததும் உன் ஆட்டம் சொல்லி விடுவேன்
மறப்பேன் என்று நினைத்தாயா

என்னவள் எழுந்து விட்டால்
முடிந்து விடும் உன் ஆட்டம்
என்னவள் துயில் களையும் நேரமிது
இறுமாப்பு வேண்டாம் - கரைந்துவிடுவாய்
என்னவள் கண்ணசைவில்

............

வீசி போன அவளின்
சுவாசம் கண்டு உயிர்தெழுந்தது
என் காதல்

நிழலா நிஜமா
புரியும் முன்பே கரைந்துபோனது
அவளின் பிம்பம்

புரிந்தும் புரியாமலும் அவள்
உதிர்த்த புன்னகை நான்
காணும் முன்னே கடந்து விட்டது .

கைபிடித்து விரல் கோர்த்து
முகம் புதைத்து தோள் உரசி
கூந்தல் முகர்ந்து
கடந்த நாட்களை காலத்திடம் கேட்கிறேன்
ஏளன பார்வையுடன் எள்ளி நகைக்கிறது

Monday, February 22, 2010

Saturday, February 20, 2010

உலக மகா சனங்களே

உலக மகா சனங்களே
ரொம்ப நாளாவே இத எழுதனும்னு நினைக்கிறது ஆனா முடியாம போய்டும்
தங்கத்தின் தங்கமே பித்தளையின் பித்தளையே இப்படி எல்லாம் மொக்க போடாம ஸ்ட்ரைட் ஆவே மேட்டர்க்கு வரேன்
எனக்கு ஒரு சந்தேகம் மக்களே . இந்த தமிழ் சினிமா ஹீரோஸ்ன்னு சொல்லிக்கிட்டு ஒரு 4 5 பேரு திரியுறானுகளே இவங்கள கேட்க யாருமே இல்லையா
பின்குறிப்பு : இது யாரையும் காயப்படுத்துவதற்காக எழுதப்பட்டவை அல்ல !! அப்படி காயப்படுகிறது என்றால் இனிமே இந்த "ப்ளாக்" பக்கமே தயவு செஞ்சு வந்துடாதீங்க.
கொஞ்ச நாள் முன்னாடி சத்யம் ன்னு ஒரு படம் பார்த்தேனுங்கோ அதுவும் மலேசியால போயி !! அத பார்த்தது அப்புறோம் தான் தெரிஞ்சுது மலேசியா போய் பாக்குற அளவு எல்லாம் வொர்த் கிடையாதுன்னு. சேரி வேறே வழி இல்லை முழு படாத பார்ப்போம்னு உக்காந்து பார்த்தேன் !! அப்போ பிடிச்சதுங்க எனக்கு சனி !! அது எப்படிங்க கிளைமாக்ஸ்ல வில்லன் சுட்டும் இவரு ஒரு மணி நேரம் உடாம பேசிகிட்டு இருப்பார்? அது பொம்மை துப்பாக்கியா என்ன? பாக்குற நமக்கே இவ்ளோ கோவம் வருதுனா தக்காளி அவனை சுட்ட வில்லன் என்ன ஆகி இருப்பான் !! மை டியர் வில்லன்ஸ் இனி நெக்ஸ்ட் டைம் பீரங்கி ஏதும் இருந்தா அத எடுத்துட்டு வந்து சுடுங்க நாட்டு மக்களின் நன்மைக்காக . அப்புறம் பஞ்ச் டைலாக் பேசாம நடிக்கவே மாட்டீங்களா!! சத்தியமா அந்த சாமி வந்தா கூட உங்கள இல்ல எங்களை காப்பாத்தமுடியாது . விஷால் ரசிகர் யாராச்சும் இருந்தா ஒரு கேள்வி : இவர் பொறக்கும்போதே இப்படி தானா இல்லை அம்மாவாசை பவுர்ணமிக்கு மட்டும் இப்படியா?
ஒருத்தன் ஒரு தடவ டார்ச்சர் பண்ணினா அது தப்பா !! தப்பில்லை தான் !! ஒருத்தன் பல தடவ டார்ச்சர் பண்ணினா? லைட்ஆ தப்பு மாதிரி தான் இருக்குது !! ஒரு குடும்பமே பல தடவ பல டார்ச்சர் பண்ணினா ? பெரிய தப்புங்கோ . அத தாங்கோ இப்ப நம்ம TR & சோன்ஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க . கம்பு சி சிம்பு உங்கள எல்லாம் பெத்தாங்களா இல்லை செஞ்சாங்களா . முடியல சாமி !! நீங்க ரெண்டு பெரும் பண்ணிக்கிட்டு இருக்குறது அட்டெம்ப்ட் மர்டர் ! மாஸ் மசாக்ரே ! பி கேர்புல் உங்கள இல்ல சாமி எங்கள தான் சொல்லிக்கிறோம் வேறேவழி ?? அது எப்படிங்க உங்களுக்கு நடிக்க தெரியாதா? அதுதான் ஊருக்கே தெரியுமே? அத ஏன் சாமி டிவி பொட்டில சொல்லி பல்பு வாங்கினீங்க ? சேரி உங்க ஊட்ல என்ன கரென்ட் பஞ்சமோ அந்த பல்பு அஹ வாங்கிபோட்டு தான் விளக்கு எரிஞ்சிருகுமோ ? ஒன்னே ஒன்னு சொல்லுறேனுங்கோ வாயல வாழ்ந்தவன் நெறைய பேருங்க , வாயல கெட்டதுன்னு பர்தா மிஸ்டர் தவளையாருக்கு அடுத்து நீங்க தானுகோ . உங்கப்பா பண்றது ரௌடிசம் நீங்க பண்றது தேர்ரரிசம் . அது எப்படி ஆயிரம் பிளாப் கொடுத்தாலும் அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கே பேசிகிட்டு இருக்கீங்களே , உங்களுக்கே ஓவரா தெரியல? மிஸ்டர் ராசேந்தர் உங்ககிட்டே ஒரே ஒரு கேள்வி : உன் கிட்ட புள்ளைய பெக்க சொன்னா பெருச்சாளிய பெத்து வெச்சு இருக்கே !! சீரழிஞ்சு போனவன பெத்து சிம்புன்னு பேரு வெச்சானாம் . மிஸ்டர் கம்பு உங்ககிட்டே ஒரு கேள்வி நீங்க இப்படி ஆனதுக்கு கரணம் உங்கப்பவா இல்லை இது மாதிரி ஒரு புள்ள பொறக்கும்னு தெரிஞ்சு அந்த எபெக்ட்லையே உங்கப்பா இப்படி ஆகிட்டாரா ?
மாஸ் மாஸ் மரண மாஸ் நீங்க ரெண்டு பெரும் அடிக்கிற காமெடி .. ஆயிரம் கவுண்டமணி வந்தாலும் உங்க காமெடியை மிஞ்ச முடியாது
அடுத்து நம்ம சின்ன தளபதி பரத் !! தம்பி உனக்கு நான் என்னப்பா துரோகம் பண்ணினேன்? அந்த முனியாண்டி படம் பாத்துட்டு வந்து பத்து நாள் ஆஸ்பத்திரில இருந்தேன் . சோறு தண்ணி இறங்கல !! அந்த படம் நடிச்சதும் நீயே போட்டு பார்தியப்பா !! பார்த்து இருந்தா நீ இந்நேரம் கீழ்பாக்கம் ல அட்மிட் ஆகி இருப்பே !! ஐயோ சாமி ஏன் போதாத நேரம் இந்த அப்டதையும் மலேசியால போய் தான் பார்த்தேன் !! முடியல தியேட்டர்அ விட்டு ஓடி வந்ததுல போர்டர் கூட கண்ணு தெரியாம சிங்கப்பூர் வந்து சேர்ந்தேன் தலைவரே . வாழ்க்கைல எங்கயாச்சும் எப்பவாச்சும் லாஜிக் "அப்டின்னு கேள்வி பட்டீங்கனா எசமான் தயவு செஞ்சு பார்த்து அடுத்த அடுத்த படத்துல பண்ணி விடுங்க !! பவம் நாங்க எல்லாம் புள்ள குட்டி காரவுங்க !! அப்புறம் அந்த படம் பழனி சத்தியமா அந்த அப்தம் பார்த்தப்ப இந்த ஆளு வர்ற சீன்ல எல்லாம் " தம்பி டீ இன்னும் வரல "அப்டின்னு தாங்க சொல்ல தோணுது . எங்க உங்களுக்கு இந்த வேலை . நாட்ல பட்டினி பஞ்சம் வந்தாலும் உங்க பஞ்ச் டைலாக்க்கு மட்டும் பஞ்சமே வராதுங்களா?

Thursday, February 11, 2010

இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!

இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!

1. எந்தப் பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வு பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..!

2. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..!

3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால் குக்கரும், அஜந்தா சுவர்க் கடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்..! ரொம்பப் பேரு தங்களுக்கு வந்ததை அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்] கட்டிவிட திட்டம் போட்டுகிட்டு இருப்பாங்க..!

4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு மெகா சைஸ் சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!

5. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க. அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க..!

6. மளிகைப் பொருட்களின் பாலிதீன் உறைகளை பத்திரமா எடுத்து வைப்பீங்க. பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப் பார்வையோடு..!

7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் விழுந்திருக்கான்னு பார்ப்பீங்க. தப்பித்தவறி சீல் விழாம இருந்தா, அந்த ஸ்டாம்பை கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு, அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.

8. சினிமா தியேட்டரோ, விரைவுப் பேருந்தோ.. இருக்கையின் இருபக்க கை வைக்கும் இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..!

9. ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரி ட்ரெஸ் தச்சுக் கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க.. [ரமேஷ், மகேஷ். அமிர்தா,சுகிர்தா..]

10. ஏ.சி. திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க.. ஏ.சி. கோச்சுன்னா, கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி கப்படிக்க வைப்பீங்க.!

11. விமானமோ, ரயிலோ, பஸ்ஸோ... ஒரு கும்பல் வந்து ஏத்திவிடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க..!

12. புதுசா கார் வாங்கினா, அதுக்கு மணப்பெண் அலங்காரம் பண்ணிதான் எடுத்துட்டு வருவீங்க..! கொஞ்ச நாளைக்கு சீட் பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க.. நம்பர் எழுதறீங்களோ இல்லையோ.. கொலைகார முனி துணைன்னு ஸ்டிக்கர் ஒட்ட மறக்கவே மாட்டீங்க..!

13.. செல் போனோ, டி.வி.ரிமோட்டோ.. லாமினேஷன் செஞ்சாதான் உங்களுக்கு நிம்மதி..!

14. அடுத்த பிள்ளைகளைப் பாரு.. எவ்வளவு சாமர்த்தியமா இருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாம இருக்கவே மாட்டாங்க.. அடுத்த பெற்றோரைப் பாருங்க.. எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு நீங்க நெனைப்பீங்க.. ஆனா சொல்ல மாட்டீங்க..!

15. உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..!

16. உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்..!

17. அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு இருக்கும். [உ-ம். பிரஷர் குக்கர், காப்பி மேக்கர், வாக்குவம் கிளீனர், பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ வேவ் அவன், கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]

18. பொங்கல், தீபாவளின்னா வீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு, தகராறுபண்ணி, போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!

19. கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க..

20. இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்..

:)

Wednesday, February 10, 2010

அடலேறு அனுபவம் 4

தொலைபேசி உரையாடல்-4

பெண்: நான் விமலா பேசர , அரவிந்த் தான பேசறது

நான் : இல்லங்க ராங் கால்.

பெண்:இல்ல அரவிந்த் இந்த நம்பர் தான் குடுத்தாரு

நான் :அப்படினா அரவிந்த்கிட்டயே கேளுங்க
பெண்: யூ ஆர் ச்சீட்டிங் ஐ நோ யூ ஆர் அரவிந்த்.

நான் :செத்துப்போன பாட்டி மேல சத்தியமா நான் அரவிந்த் இல்ல நான் அடலேறு.

பெண்:என்ன அடில ஆறா.. வாட் யூ மீன் ?

நான் : இந்த முறை சிக்க கூடாதுனு நினைத்தவாரே பொறுமையாக அது இல்லங்க விமலா “ என் பேர் அட’லேறு என அழுத்தமாக சொன்னேன்.

பெண்: என்னங்க வெரும் ”லேரு”னு ஒரு பேரா, ஆமா ஏன் எப்பவும் அட அட னு சொல்றீங்க,

நான் : இல்லங்க அட அட னு சொல்லுல, அது தான் என் பேரு..

பெண்: என்னங்க ’அட’ னு ஒரு பேரா முன்னாடி ’லேறு’ னு தான சொன்னீங்க..

நான் : இல்லங்க ’அட’ வும் ’லேறு’ ம் சேர்த்தி சொல்லுங்க அது தான் என் பேரு

பெண்:ஓ அடலாறா சரிசரி ..

இவளை திருத்த முடியாது என முடிவு செய்து .. விமலா ஆள விடுங்க என் பேரு எனக்கே தெரியாது போன வைங்க என சொல்லி இனைப்பை துண்டித்தேன் .

வீனா போனவள பெத்து விமலானு பேரு வெச்சாங்களானு கேட்க தோன்றியது வேற .

அடலேறு அனுபவம் 3

தொலைபேசி உரையாடல்-3

நான்: ஹலோ, டிராவல்ஸ் ஆபீஸா?

எ.மு: ஆமா சார் சொல்லுங்க..

நான்:சார் வெள்ளிக்கிழமை பொள்ளாச்சிக்கு ஒரு டிக்கெட் வேணும்

எ.மு:இருங்க பாத்து சொல்ற… ஒரே சீட் தா இருக்கு சார்

நான்:நானும் ஒருத்தன் தான் சார் இருக்க

எ.மு:சரி சார் , உங்க பேரு , போன் நம்பர் சொல்லுங்க.

நான்:(சனி இன்னைக்கு பொட்டு வெச்சு , பூவும் வெச்சு விளையாடாம போகாதே என நினைத்தவாரே)

பேரு அடலேறு, அலைபேசி எண்.^&*^(*&^*(

எ.மு:சரி சார் , புக் பண்ணிட்ட 7 மணிக்குள்ள வநது டிக்கெட் வாங்கிகோங்க..
(ஆச்சர்யம் கொண்டவனாய் முதல் முறையே நம்ம பெயர சரியா எழுதீட்டாரே ! இவன் ஒரு மிக பெரிய அறிவாளி என எண்ணியபடியே)

சார் பேர சரியா எழுத்தீட்டீங்களா?

சரியா எழுதீட்ட சார், தினமும் எவ்வளோ பேரு போன் பண்றாங்க, அதெல்லாம் கரெக்டா எழுதீட்ட ”கடலாறு தான சொன்னீங்க”னு

சொன்னானே பாக்கனும்…, இடியே என் தலை மீது விழுந்தது

அடலேறு அனுபவம் 2

தொலைபேசி உரையாடல்-2
நான்: வணக்கம் , புத்தககடையா?

எதிர்முனை:ஆமா சொல்லுங்க சார்,

நான்:(குறிப்பிட்ட புத்தகதின் பெயரை சொல்லி ) வந்துருச்சுங்களா?

எ.மு: இல்ல சார் இன்னும் வர்ல ,வந்தா கூப்பிட்டு சொல்லறோம் , உஙக பேரு, செல் போன் நம்பர் சொல்லுங்க..
(இந்த முறையும் எதாவது ஏழரை நடக்கும் என எண்ணியவாறே)

என் பெயர் அடலேறு, அலைபேசி எண் வந்து..

என்ன சொன்னீங்க அடலாறா? இல்லங்க அடலேறு .. ஓ அடவாரா சரி செல் போன் நம்பர் சொல்லுங்க..
இல்ல சார் என் பேரு அடலேறு..

அது தான் அடவாரு செல் போன் நம்பர் சொல்லுங்க..

வழக்கம் போல பெயரை கெடுத்துக்கொள்ள விரும்பாதலால் போல இந்த முறையும் போன் துண்டிப்பு.

எதிர் முனை: ஹலோ அடவாறு ,அடவாறு லைன்ல இருக்கீங்களா?

அடலேறு அனுபவம் 1

வாழ்க்கைல எவ்வளவோ நொந்த அனுபவம் இருந்தாலும் என்னோட பேரே எனக்கு நொந்த அனுபவமா ஆனது தான் கொடுமை வெச்சாலும் வெச்ச பேரு ”அடலேறு”னு நம்ம மக்களோட அழிச்சாட்டியம் தாங்க முடியல..

தொலைபேசி உரையாடல் -1

நான்:ஹலோ கேஸ் ஏஜன்சியா?

எதிர்முனை:ஆமாங்க, நீங்க யார் பேசறீங்க?

நான்:அடலேறு பேசறங்க…

எதிர்முனை: என்ன அடையாறுல இருந்து பேசறீங்களா?

நான்: இல்லங்க என் பேரு அடலேறு..

எதிர்முனை:என்ன அடலொரு ஆ..
(டென்சஹனாகி என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாய் இருக்க)

அலோவ் அடலொரு சொல்லுங்க , எந்த ஏரியா நீங்க?

நான்:நான் கோடம்பாக்கம் ..,வீட்ல கேஸ் தீந்துருச்சு அதான் போன் பன்ன

எதிர்முனை:முன்னாடி அடையாறுனு சொன்னீங்க..

நான்:இல்லங்க அது எம் பேரு..

எதிர்முனை:அடையாறுனு பேரா ?

நான்:இல்லங்க அடலேறு தான் என் பேரு.

எதிர்முனை:சரி அடலொரு வீட்டு அட்ரெஸ் சொல்லுஙக…

என் பெயரை தப்பாக சொன்னால் கூட பரவாயில்லை அவர் ஒரு பெயர் படுகொலையை அரங்கேற்றி கொண்டிருந்தார்.

இதுக்கு மேல என் பெயரை ஒருவர் கொலை செய்வது பொருக்க முடியாமல் ஏதும் சொல்லாமலேயே ரிசீவரை வைத்து விட்டேன்.

எதிர்முனை:அலோவ் அலோவ் அலோவ்வ்வ்வ்வ்

மொக்கை மேனேஜ்மெண்ட் -cont

மொக்கை சில விஷயங்களை ரொம்ப கிளியரா சொல்றதுக்குத்தான் பெரும்பாலும் நாம பயன்படுத்துறோம்!

1.ஒரு வேலையும் இல்லாததால!

2.கடலை போட ஒரு ஃபிகரும் சிக்காத பாவியாக போனதால...!

3.ஏகப்பட்ட வேலைகள் இருந்தாலும் கூட டேமேஜர்களை டென்ஷன் பண்றதுக்கொசரம்!

4.சில சமயம் மத்தவங்க என்னமா மொக்கை போடறாங்க நாமளும் டிரைப்பண்ணுவோம்ம்னு
ஒரு அல்ப ஆசையில!

5.வேலைகள் கொடுக்கும் டென்ஷனை குறைக்க

இப்படியாக பல இடர்பாடுகளினை தவிர்த்தும்,தந்தும் நம்மால் போடப்படும் மொக்கைகளுக்கும் ஒரு மனுசன் ரெஸ்பாண்ட் பண்ணி பதில் சொல்றான்னே அவனுக்கு நாம என்ன பண்ணனும்!


கிழக்கு பார்க்க நிப்பாட்டி வைச்சு அவங்க காலுல விழணும்ங்க!

எங்க நீங்க கிழக்கு பார்க்க நில்லுங்க பார்ப்போம்!

மொக்கை மேனேஜ்மெண்ட்

மொக்கை மேனேஜ்மெண்ட் அப்படிங்கறது ரொம்ப ரொம்ப சிம்பிளான விஷயம்ங்க! கிட்ட்தட்ட கொஞ்ச வருட காலங்களாக இந்த மொக்கை நொம்ப பிரபலமாகியிருக்கு!

அதாகப்பட்டது இந்த ஐடி கம்பெனியெல்லாம் வந்து பயபுள்ளைங்களை அள்ளிக்கிட்டு போய் ஏசியில குந்த வைச்சு,நேரா நேரத்துக்கு சோத்தை வாயில வைச்சு ஊட்டி விட்டு வேலை பாருங்கப்பான்னு சொன்ன காலத்திலேருந்து ஆரம்பிச்சிது இந்த மொக்கை ரொம்ப பிரபலமாக!

இப்ப நாம ஸ்டெப் பை ஸ்டெப்பா மொக்கை மேனேஜ்மெண்ட் பத்தி படிக்க போறோம் - இல்ல,இல்ல ச்சும்மா ஒரு ரவுண்ட் ரெப்ரஷ் பண்ணிக்கப்போறோம்!

திரும்ப, திரும்ப சொல்றேன் மொக்கை அப்படிங்கறது ரொம்ப சிம்பிளான விசயம்தாங்க!

பெரிய படிப்பு படிச்சவங்க அப்புறம் பெரிய பெரிய ஆளுங்களெல்லாம் மெத்தை சைசுக்கு புக் போடற அளவுக்கு இதை பத்தி எழுதிட்டாங்க! ஆனா அதையெல்லாம் படிச்சுட்டு மொக்கைபோட்டா டென்சன் ஆகிடுவீங்கன்னு அவுங்களுக்கு தெரியாது!

ஒரு உதாரணத்துக்கு, ஆயிரம்ந்தான் இருந்தாலும் அந்த ஆயிரத்தி1வது மொக்கை அவ்ளோ சூப்பரா இருக்கும்ம்னு சொன்னதை நம்பி அம்புட்டு மொக்கையையும் படிக்கிற மக்கள்கிட்ட கேட்டீங்கன்னா மொக்கைய பத்தி ரொம்ப நல்லாவே சொல்லுவாங்க!

ஆக்சுவலா இந்த மொக்கை அப்படிங்கற வார்த்தை ரொம்ப அதிகம் பிரயோகிக்கப்பட்டாலும் கூட சில சமயம் கடியாகிடும்! ஆமாங்க மொக்கை சில சமயம் கடி மாறுவேஷத்திலயும் வரும்!

எவ்ளோதான் கடிச்சாலும் கடைசியா வர்ற மொத்த பேருமே என்னா மாதிரி மொக்கை போடுறாண்டா இவன்னு ஆனந்த கண்ணீர் வடிக்க செய்து விடும் வாய்ப்புகள்தான் அதிகம்!

Real Management Funda

1. "We will do it" means "You will do it"

2. "You have done a great job" means "More work to be given to you"

3. "We are working on it" means "We have not yet started WORKING on the Same"

4. "Tomorrow first thing in the morning" means "Its not getting done "At least not tomorrow!"

5. "After discussion we will decide-I am very open to views" means "I have already decided, I will tell you what to do"

6. "There was a slight mis-communication" means "We had actually lied"

7. "Lets call a meeting and discuss" means "I have no time now, will talk later"

8. "We can always do it" means "We actually cannot do the same on time"

9. "We are on the right track but there needs to be a slight extension of the deadline" means "The project is screwed up, we cannot deliver on time."

10. "We had slight differences of opinion "means "We had actually fought"

11. "Make a list of the work that you do and let's see how I can help you" means "Anyway you have to find a way out no help from me"

12. "You should have told me earlier" means "Well even if you told me earlier that would have made hardly any difference!"

13. "We need to find out the real reason" means "Well I will tell you where your fault is"

14. "Well Family is important; your leave is always granted. Just ensure that the work is not affected," means, "Well you know…"

15. "We are a team," means, "I am not the only one to be blamed"

16. "That's actually a good question" means "I do not know anything about it"

17. "All the Best" means "You are in trouble"

Saturday, January 2, 2010

விநாயகர் அகவல்

விநாயகர் அகவல்

சீதக்களப செந்தாமரைப்பூம்
பாதச் சிலம்பு பல இசைபாட
பொண்ணுரை ஞானும்பூந்துகிலாடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழகெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழமுகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சுகரமும் அங்குசாபாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்
நான்ற வாயும் நாலிறு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும்
திரண்ட முப்புரிநூல் திகழொளிமார்பும்
சொற்பதங் கடந்த தூரிய மெஞ்ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரு மூஹிகக் களிறே
இப்பொழுதென்னை ஆட்கொள வேண்டித்
தாயாயெனக்குத் தானெழுந்தருளி
மாயாப்பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்
பொருந்தவே வந்தென் உளந்தனிற்புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திரம் இது பொருளென
வாடாவகை தான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புற கருணையி லினிதெனக்கருளிக்
கருவிக ளடுங்குங் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்குந் தந்தெனக்கருளிஸ்
மலமொரு நான்குந் தந்தெனக்கருளி
மலமொரு மூன்றின் மயக்கமறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆரா தாரத் தங்குச நிலையும்
பேறா நிறுத்திப்பேச்சுரை அறுத்தே
இடையிங் கலையில் எழுத்தறிவித்துக்
கடையிற் கழுமுனைக் கபாலமுங் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவிலுணர்த்திக்
குண்டலி யதனிற்கூடிய அசைபை
விண்டெழுமந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலாலெழுப்புங் கருத்தறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையுங் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற் சக்கரத்தின் உறுப்பையுங் காட்டி
சண்முகதூலமுஞ்சதுர் முகசூட்சமும்
என் முகமாக இனிதெனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரிஎட்டு நிலையுந் தெரிசனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரி எட்டு நிலையுந் தெரிசனப் படுத்திக்
கருத்தினிற் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக் கருளி
என்னை அறிவித் தெனக்கருள் செய்து
முன்னை அறிவித்தெனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக்களைந்து
வாக்கு மனமுமில்லா மனோலயந்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள் வெளியிரண்டிற் கொன்றிடமென்ன
அருள் தரும் ஆனந்தத்தழுத்தியென் செவியில்
எல்லையில்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள் வழிகாட்டிச்
சத்தத்தினுள்ளே சதாசிவங் காட்டி
சித்தத்தி னுள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற் கணுவா யாப்பாலுக் கப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேதமும் நீறும் விளக்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கருத்தினரும் பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனையாண்ட
வித்தக விநாயகர் விரைகழல் சரணே
சரணே சரணே

வீர அனுமன் கவசம்

காப்பு:

மன்னுயிர் காத்து மனம் நிறைந்த அனுமன்
தன்னிருதாள் போற்றித் தஞ்சக் கவசம் பொன்னாக
என்னாவிலுதிக்க ஏரம்பக் கணபதியே
உன்னருளால் உயர்த்து

கவசம்:

மூவுலகும் நலம் சூழ அருளிடும்
தேவகுமாரனே, தஞ்சம்! தஞ்சம்!
மூண்டிடும் வினைகளைத் தாற்றும் முன்னவா,
முழுவதுமா யெனை ஆண்டிட வேண்டினேன்!

மூலப்பரம்பொருள் என் மனம் காக்க,
முகத்தொடு முழுமெய் அருள்காக்க,
சூலத்தினாலெந்தன் செவி காக்க,
சூட்சுமமாகவே சுந்தரம் காக்க

வாயுபுத்திரன் எந்தன் வாய் காக்க,
வானவனே எந்தன் வதனம் காக்க,
நேயனே எந்தன் நெற்றி காக்க,
நிம்மதியளித்தெந்தென் நாசி காக்க

நீளவுயர்ந்தோனே நா காக்க,
பாசமறுப்பவனே பல் காக்க,
புகலளிப்போனே புருவம் காக்க,
போற்றுகிறேன் கண்பாவை காக்க!

கூரிய நகங்கொண்டு கூந்தல் காக்க,
குணவானே என்றன் கழுத்தைக் காக்க,
மாசறுக்கும் மணியே மார்பு காக்க,
தேசுறு தோளினைத் தாங்கிக் காக்க

பக்திக்கருள்பவனே பிடரி காக்க,
பாற்கடலோன் அடிமை உதடு காக்க,
ஈகைதிறத்தோனென்றன் இடை காக்க,
முழுமுதற்பொருளென்றன் முதுகு காக்க

வாதில் வல்லோனே வயிற்றைக் காக்க,
வடிவழகினன் என் நாபி காக்க,
கதை எடுப்பவன் கைகளைக் காக்க,
கண்ணனின் அடியவன் கருத்தினைக் காக்க

வீம சகோதரன் விரல்களைக் காக்க,
நமனை அழித்தவன் நகங்களைக் காக்க,
நாராயண தூதன் நரம்புகளைக் காக்க,
நம்பிடும் பாலனை நாயகன் காக்க

பிரும்மகுலத்தவன் பிட்டம் காக்க,
குன்றினை எடுத்தவன் குணத்தைக் காக்க,
செந்துவர் வாயினன் செழிதொடை காக்க,
மூலவன் மூட்டினை முன்னின்று காக்க

கருணாமூர்த்தி என் கால்களைக் காக்க,
உரமிகு தோலினன் உள்ளம் காக்க,
காரிருள் வண்ணன், தொண்டன் காக்க,
கருத்துடன் மனமும் கவர்ந்தவன் காக்க

கதிரொளி வானரன் கணைக்கால் காக்க,
"பதி"யென் பாதம் இரந்தும் காக்க,
வானரவேந்தன் கால் விரலினைக் காக்க,
வதனம் சிவந்தவன் வல்லமை காக்க

குலநலம் காப்பவன் குருதியைக் காக்க,
குணமிகு சீலன் எம் குடியினைக் காக்க,
மேன்மை பெருகிட பாரதம் காக்க,
மேதினி செழித்திட மாருதி காக்க

மக்களைக் காத்து மனங்களில் உறைபவன்
மகேசவடிவினன் வல்லமை காக்க,
சிக்கலறுத்துச் சீலம் அளித்தெமைச்
சிறப்புடன் காப்பவன் சீர்தாள் வாழ்க!

மன்னவன் மாருதி! மனங்கவர் சாரதி!
மாதா சீதை யாவர்க்கும் மங்களம்!
சித்தம் கட்டியென் சிரத்தை யாவுங்கொண்டு
முத்தி வேண்டுகிறேன்! அருள்வாய்!

ஸ்ரீ கிருஷ்ணகவசம்

எங்கெங் கேநான் இருந்திடும் போதும்
அங்கங் கேநீ அருள்செய வருக
கோசலலை ஈன்ற குமரா வருக
கோதையின் மாலை கொண்டவன் வருக
ரகுவம் சத்தின் நாயகன் வருக
யதுவம் சத்தின் யாதவன் வருக
மதுவை வென்ற மாதவன் வருக
மலைக்குடி கொண்ட மாலவன் வருக ! 70

திருப்பதி யாளும் திருமால் வருக
திருவரங் கத்துப் பெருமாள் வருக
இராவணன் கொடுமை தீர்த்தாய்; துன்பம்
'இரா'வணம் எமக்கும் இன்னருள் புரிக
கம்சன் கொடுமை களைந்தோய் வருக
காலனை வெல்லக் கைவலி தருக
நெற்றியில் திருமண் நெஞ்சில் வைரம்
காதில் குண்டலம் கையில் வில்லொடு. 78

தண்டைக் காலில் சலங்கை குலுங்க
அண்டையில் வந்து அருளே புரிக
கவுரவர் தம்மைக் களத்தில் வென்றாய்
கவுரவம் காக்கக் கண்ணா வருக
பார்த்தன் மகிழப் பாடம் சொன்னாய்
படித்தவன் மகிழப் பரமே வருக
மூன்று குணங்கள் முறையாய்க் கூறிய
சான்றோன் பாதம் தாவி அணைத்தேன். 86

சிக்கென உன்னைச் சேர்த்துப் பிடித்தேன்
பக்கென உந்தன் பாதம் பற்றினேன்
கொக்கென நின்று குறிவைத் திருந்தேன்
அக்கணம் வந்தாய் அடியில் விழுந்தேன்
இக்கணம் என்னை ஏங்க விடாமல்
தக்கவ னேநீ தயவுடன் அருள்க !
கல்லாய்ப் போனவள் காலடி பட்டு
பெண்ணாய் ஆனது பிழையே அன்று ! 94

உன்னால் தானே உலக இயக்கம்
கண்ணனில் லாமல் கடல்வான் ஏது ?
கண்ணனில் லாமல் கடவுளு மில்லை
கண்ணனில் லாமல் கவிதையு மில்ல
கண்ணனில் லாமல் காலமு மில்லை
கண்ணனில் லாவிடில் காற்றே இல்லை
எத்தனை பிறவி எத்தனை பிறவி
அத்தனை பிறவியும் அடியேன் கொண்டால் 102

சத்திய நாதன் தாள்களை மறவேன்
தத்துவக் கண்ணன் தனிமுகம் மறவேன்
உன்னை நம்பி உனையே சேர்ந்தால்
பிறவிக ளிலை நீபேசிய பேச்சு
உலகில் போதும் ஒருமுறை மூச்சு
உன்னிடம் சேர்த்து உன்வடி வாக்கு
இங்கே நாங்கள் இருக்கும் வரையில்
சங்கு முழங்கு தர்மம் நிலைக்க ! 110

பிள்ளைகள் வாழ்க்கை பிழையா காமல்
மனையவள் வாழ்க்கை மாண்பு கெடாமல்
இல்லை என்றொரு நாளில் லாமல்
இன்னும் என்னும் ஆசை வராமல்
தொல்லை என்பது துளியு மிலாமல்
தொற்றும் நோய்கள் பற்றி விடாமல்
முதுமைத் துயரம் மூண்டு விடாமல்
படுக்கையில் விழுந்து பரிதவிக் காமல் 118

சிந்தனை கெட்டுத் திறமையும் கெட்டு
நிந்தனை பெற்று நீங்கி விடாமல்
என்றும் பதினா றிளமை வழ்ங்கு
இப்பணி தொடர அற்புதம் காட்டு
தளரா மேனியில் சக்தியைக் கூட்டு
தாய்போ லிருந்து சாதம் ஊட்டு
வாழ்ந்தால் இப்படி வாழ்வது நன்றென
ஊரார்க் கென்னை உதாரணம் காட்டு ! 126

உலகில் ஒருவன் உத்தமன் இவனென
உயிர்கள் பேசிடும் ஒருநிலை கூட்டு
சிறியவர் பெரியவர் வறியவர் செல்வர்
சரிசரி சரியெனத் தலையை அசைக்க
பொலிபொலி பொலியெனப் புகழும் விளங்க
மளமள மளவென மனையிருள் நீங்க
கலகல கலவெனக் காசுகள் சேர
தளதள தளவெனத் தர்மம் தழைக்க 134

வரவர வரவர வாய்ப்புகள் வாய்க்க
ரகுபதி பசுபதி நன்மைகள் அருள்க
ஐயா சரணம் சரணம் சரணம்
அடியவன் வாழ்வில் நீயே கவசம்
கவசம் கவசம் கவசம் கவசம்
வந்தது வாழ்வில் மன்னவன் கவசம்
கவசம் கவசம் கவசம் கவசம்
வாழ்க்கை என்றும் கோபுரக் கலசம் ! 142

அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம்
அவனே துணையென அறிவோம் அறிவோம்
அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம்
அவனிடம் எதையும் தருவோம் தருவோம்
ஜெயஜெய ராமா ஜெயஜெய கிருஷ்ணா
ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய
ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய

Sri Krishna Kavacham - part 1

இது திரு கண்ணதாசனால் இயற்றப் பட்டது.

அவர் சொல்லுகிறார்:

துன்பங்களில் இருந்து விடுதலை பெற, குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, நோய்நொடிகள் வருமுன்னே தடுக்க, பேய்பிசாசுகள் பயம் நீங்க, நீண்ட ஆயுளை இறைவனிடம் வேண்ட, ஆன்மாவைச் சுற்றி ஒரு வேலி அமைத்துகொள்ள, இந்தக் கவசத்தைத் தினமும்
பாராயணம் செய்யவும்.

கண்ணனை நினைப்போர் சொன்னது பலிக்கும்;
இந்தக் கவசம் படிப்போர் கவலைகள் பறக்கும்.

அகரம் முதலே அழியாப் பொருளே
ஆயர் குலமே நேயர் கரமே
இகமும் பரமும் இணையும் இடமே
ஈதல் மரபாம் இதயத் தவமே
உலகக் குடையே உயிரின் கலையே
ஊதும் குழலுள் வேதப் பொருளே
எரியும் கனலில் தெரியும் புனலே
ஏழை மனதில் வாழும் அருளே
ஐயம் தீர்க்கும் அறிவுக் கதிரே
ஐவர் துணையே அன்புச் சிலையே
ஒளியே விழியே உயிரே வழியே
ஓடும் நதியில் பாடும் அலையே
அவ்வவ்வுலகை ஆக்கும் நிலையே
அடியேன் சரணம் சரணம் சரணம் ! 14

அறமே அறமே அறமே அறமே
திறமே திறமே திறமே திறமே
தவமே தவமே தவமே தவமே
வரமே வரமே வரமே வரமே
வேதம் விளையும் வித்தே விளைவே
நாதம் பொழியும் நலமே நிலமே
ஓதும் பொழுதே உடனே வருவாய்
உள்ளம் கேட்கும் வெள்ளம் தருவாய்
அறியாக் கவலை அதிகம் அதிகம்
அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம் ! 24

பொய்யா மொழியே பொங்கும் நிலவே
பூமிக் குடையின் காவற் பொருளே
பார்த்தன் பணியும் பாதம் காக்க
பாஞ்ச சன்னியம் பக்தனைக் காக்க
மூடர்கள் தமையும் மோகனன் காக்க
முள்ளில் மலரால் முளைத்தோன் காக்க
வாடும் உயிரை மன்னவன் காக்க
தேடும் விழியைத் திருமால் காக்க
கேலிப் பொருளைக் கிருஷ்ணன் காக்க
கண்ணீர் நதியைக் கண்ணன் காக்க
துன்பம் என்றொரு சுமையைத் தீர்க்க
தூயோன் வருக துணையே தருக ! 36

தகிடத் தகிடத் தகிடத் தகவென
தறிபடு துன்பம் தறிகெட ஓட
திகிடத் திகிடத் திகிடத் திகிடத்
திசைவரு கவலை பசைஇல தாக !
துருவத் துருவத் துருவத் துருவிடத்
தொலையாப் பொருளே அலையாய் வருக !
நிஷ்கா மத்தில் நிறைவோன் வருக
கர்மசந் யாசக் களமே வருக
ஞானம் யோகம் நல்குவன் வருக
நல்லோர் வாழ்வில் நலமே நிறைக ! 46

அடியேன் துயரம் அதிகம் அதிகம்
அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம்
பொங்கும் வேலும் புண்ணாக் காது
பொருந்தும் துயரம் பொடிபடு மாறு
தாங்கும் தலைவன் தாமரைக் கண்ணன்
தாளில் விழுந்தேன் சரணம் சரணம்
மதுசூதனனே மனிதன் சரணம்
இருடீ கேசா இயலான் சரணம் ! 54

கீதா சாரிய கிருஷ்ணா சரணம்
வேதா சாரிய வேந்தே சரணம்
தேவகி மைந்தா சிறியேன் சரணம்
யசோதா குமரா அடியேன் சரணம்
உன்னை விட்டொரு உறவுக ளில்லை
என்னை விட்டொரு இனியவ னில்லை
நம்மை விட்டொரு நண்பர்க ளில்லை
நன்மையில் உன்போல் நாயக னில்லை ! 62

ஸ்லோகம்

Abhiitistava
Acyutaashtakam
Agramani
Ashtasloki
Baalamukundaashtakam
Bhaashyakaaraprapatti
Bhagavaddhyaanasopaanam
Bhiishmastuti
Saattrumurai
Chatusslokii
Dashaavataarastotram
Dehaliishastuti
Devaraajamangalam
Dhaatiipanchakam
Dhanvantaristotram
Garudadandaka
Godaastuti
Devaraajapanchakam
Padmaavatiistotram
Yogalakshmiinarasimhasuprabhaatam
Vishnuvijayastotram
Vishnushatanaamastotram
Vishnorshodashanaamastotram
Venkateshastotram
Venkateshamangalaashaasanam
Vegaasetustotram
Yatiraajavimshati
Vedaantadeshikaprapatti
Vairaagyapanchakam
Tiruppaavai
Sudarshanakavacham1
Sudarshanaashtakam
Sristava
Srirangagadyam
Sriiraamasuprabhaatam
Sriiraamastotram1 Old
Sriiraamastotram
Sriiraamamangalam
Sriiraamabhadramangalaashaasanam
Sriinivaasastuti
Shodashaayudhastotram
Shaaligraamastotram
Saulabhyachuudaamanistotram
Runavimochana
Rangaraajasuprabhaatam
Sristuti
Ranganaathastotram1
Ranganaathamangalam
Ranganaathaashtakam
Raamarakshaastotram
Raamaashtottaram
Bhuustuti
Godaacatusslokii
Gopaalavimshati
Gopikaagiitam
Govindaashtakam
Govindadaamodarastotram1
Hanumadashtottaram
Harisharanaashtakam
Haryashtakam
Hayagriivakavacham
Hayagriivapanjaram
Hayagriivasampadaastotram
Hayagriivastotram
Jagannaathaashtakam
Jitantestotram1
Jitantestotram2
Jitantestotram4
Jitantestotram5
Jitantestotram6
Kanakadhaarastotram
Kanikannan
Kanninunshiruttaambu
Karaavalambam
Karaavalambam1
Krishnamangalaashaasanam
Krishnamvande
Lakshmiidvaadashanaamastotram
Lakshmiihayavadanaprapatti
Lakshmiinrisimhaashtottaram
Lakshmiinrusimhamangalaashaasanam
Lakshminrusimhapancharatnam
Lakshmyashtottaram
Maangalyastavam
Madhuraashtakam
Mahaalakshmyashtakam
Mahaasudarshanastotram
Mantraraajapadastotram
Mukundamaalaa
Naaraayanaashtakam
Naaraayanakavacham
Namaramayanam
Narasimhakavacham1
Narasimhakavacham1 Old
Navanaarasimhamangalaashaasanam
Nrisimhaashtakam
Nrisimhapancaamrutastotram
Nrisimhastuti
Nrusimhamangalam
Nyaasadashakam
Omdevibhuvaneswari
Panchaamrutastotram
Paraankushaashtakam
Paramaarthaslokadvayam
Paramaarthastuti
Pavanasutapancharatnam
Praarthanaashtakam
Putrapraaptyashtakam
Aadityahrudayam
Aaraavamudanmangalaashaasanam
Ashtabhujaashtakam
Cakraraajamangalam
Desikamangalam
Devaraajaashtakam
Dvadashastotram
Hayagriivaashtottaram
Hetipungavastava
Jitantestotram3
Kaamaasikaashtakam
Krishnaashtottaram
Lakshmiinrusimhaadisuprabhaatam
Mahaalakshmiikavacham
Mattapallimangalaashtakam
Narasimhastotram1
Nrusimhaprapatti
Panchaayudhastotram
Paratvaadipanchakam
Raaghavaashtakam
Raamaanujacatusslokii
Raamabhujangaashtakam
Raghuveeragadyam
Ranganaathamangalaashaasanam
Ranganaathastotram
Ranganaathasuprabhaatam
Sankshepasundarakaandam
Shatpadiistotram
Siitaaraamastotram
Sriinivaasasuprabhaatam
Sriiraamapancharatnam
Sriiraamastotram1
Sriiraamastotram2
Sriisaileshaashtakam
Sudarshanaashtottaram
Sudarshanashadkam
Tiruppalliyezuchchi
Varaahakavacham
Vedaantadeshikasuprabhaatam
Venkateshakaraavalambastotram
Venkateshvaravajrakavachastotram

உள்ளம் உருகுதையா

1) uLLam urugudhaiyA

uLLam urugudhaiyA ... murugA
unnadi kANgaiyilE (2)

aLLi aNaiththidavE (3)

enakkuL ... Asai perugudhappA

murugA ... uLLam urugudhaiyA

pAdip paravasamAi unnaiyE
pArththidath thONudhaiyA (3)

Adum mayilERi (3)

murugA ... Odi varuvAyappA

uLLam urugudhaiyA ... murugA
unnadi kANgaiyilE

aLLi aNaiththidavE
enakkuL Asai perugudhappA

murugA ... uLLam urugudhaiyA

pAsam agandradhaiyA ... pandha
pAsam agandradhaiyA

undhan mEl ... nEsam vaLarndhadhaiyA

eesan thirumaganE (3)

endhan ... eenam maRaindhadhappA
uLLam urugudhaiyA

ARu thirumugamum (2)

aruLai ... vAri vazhangudhaiyA

ARu thirumugamum
un aruLai ... vAri vazhangudhaiyA

veera migun thOLum (2)

kadambum ... vetri muzhakkudhappA

uLLam urugudhaiyA

kaNkaNda theyvamaiyA (2)

nee indhak kaliyuga varadhanaiyA

kaNkaNda theyvam aiyA
nee indha kaliyuga varadhanaiyA

pAvi endrigazhAmal (2)

enakkun ... padhamalar tharuvAyappA

uLLam urugudhaiyA ... murugA
unnadi kANgaiyilE

aLLi aNaiththidavE enakkuL Asai perugudhappA

murugA ... uLLam urugudhaiyA

uLLam urugudhaiyA ... uLLam urugudhaiyA.

Devotional Songs

JAYA JAYA DEVI JAYA JAYA DEVI
DURGA DEVI CHARANAM (2)

DURGAI AMMANAI THIDHITHAL ENDRUM
THUNBAM PARANDHODUM
DHARMAM KAKKUM THAYUM AVALAI
DHARISHANAM KANDAL POODHUM (DURGAI)
KARMA VINAIGALUM OUDUM
SARVA MANGALAM KOODUM (JAYA)

1.PORKARANGAL PADHINETTUM NAMMAI
SUTRI VARUM PAGAI VIRATTUM
NETTRIYILE KUNGUMA POTTUM
VETTRIPAADHAIYAI KAATTUM
AAYIRAM KANGAL UDAIYAVALE
AADHI SHAKTHI AVAL PERIYAVALE
AAYIRAM NAAMANGAL KONDAVALE
THAI POL NAMMAI KAPPAVALE (JAYA)

2.SANGU CHAKARAM VILLUM AMBUM
MINNUM VAALUM VELUDAN SOOLAMUM
THANGA KAIKALIL THANGI NIRPAAL AMMA (2)
SINGATHIN MEL AVAL VEETRIRUPAAL
THINGALAI MUDI MEL SOODI NINDRAAL
MANGALA VAALVUM THANDHIDUVAAL
MANGAYARKARASIYUM AVAALE
ANGAYARKANNIYUM AVAALE (JAYA)